புதுடில்லி: தேர்தல் முடிந்த நிலையில் யார் டெல்லி முதல்வர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் யாரை முதல்வர் ஆக்கலாம் என்ற தேடுதல் வேட்டையில் பாஜக ஈடுபட்டுள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும், யார் அடுத்த முதல்வர் என்பது இன்னும் முடிவாகவில்லை. வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை கட்டுப்படுத்துவதுடன், ஊழல் குற்றச்சாட்டில் சிக்காத ‘எளிமையான முதல்வர்’ அடையாளம் கொண்டவராக இருக்க வேண்டும் என பாஜக விரும்புகிறதாம்.
அதே நேரத்தில் கடுமையான முடிவுகளை உடனுக்குடன் எடுக்கவும் அவர் தயாராக இருக்க வேண்டுமாம். இது போன்ற ஒரு நபரை தான் பாஜக தேடி வருகிறது. அதனால் தான் இன்னும் டெல்லிக்கு யார் முதல்வர் என்ற முடிவை எடுக்க முடியாமல் பாஜக தலைமை திணறுகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.