புதுடெல்லி: டெல்லி முதல்வர் அறையில் அம்பேத்கர், பகத்சிங் படங்கள் உள்ளதாக முன்னாள் முதல்வர் அதிஷியின் குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மியில் கெஜ்ரிவால் மட்டுமே இதுவரை பொய் பேசுவார் என நினைத்திருந்ததாகவும், அவரையே அதிஷி விஞ்சி விட்டதாகவும் அக்கட்சி விமர்சித்துள்ளது.
முன்னதாக, டெல்லி முதல்வர் அறையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இடம்பெற்றிருந்த அம்பேத்கர், பகத்சிங் புகைப்படம் அகற்றப்பட்டதாக அதிஷி குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்குத்தான் பாஜக விளக்கம் அளித்து முன்னாள் முதல்வர் அதிஷியின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.