சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் வன்கொடுமை வழக்கு 6 சதவீதம் ஆக குறைந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:
அரசின் நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு வன்கொடுமை வழக்குகள் 6 சதவீதம் குறைந்துள்ளது.
சமூகப்பணி கல்லூரியில் மையம் அமைத்து விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 421 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 445 ஆக இருந்த வன் கொடுமையால் பாதிக்கப்படும் பகுதிகள் 368-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.