சென்னை : தமிழன் ‘தமிழ்நாட்டை’ உருவாக்கவில்லை. ஆங்கிலேயர்களால் அது உருவாக்கப்பட்டது என சிபி ராதாகிருஷ்ணன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது; எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை என்று சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது.
சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள், அதைப் பின்பற்றினர்; இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்கள், வரலாற்றை சிபி.ராதாகிருஷ்ணன் திரித்து சொல்வதாக விமர்சிக்கின்றனர். இதே போல் சிபி ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.