புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டியில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று அளித்த பேட்டி:-
அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்து பேசிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டிருப்பது ஏற்கத்தக்கது. மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிகளில் இதுபோன்ற மூடநம்பிக்கை நடவடிக்கைகள் கூடாது. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வருகிறோம்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி விசிக சார்பில் அக்டோபர் 2-ம் தேதி மாநாடு நடத்தப்படும். திமுக கூட்டணியுடன் இருக்கிறோம். தமிழகத்தில் 99% சாதி பாகுபாடு இன்னும் உள்ளது.
ஒரு சதவிகிதம்தான் பேச ஆரம்பித்திருக்கிறோம். இந்த விவாதம் இந்திய அளவில் விரிவுபடுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.