சென்னை: தொடங்கிய முதல் நாளிலேயே குவிந்த தொண்டர்களால் அதிமுக தலைமை அலுவலகம் திணறியது.
அதிமுக சார்பில் பேரவைத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோகிக்கும் பணி சென்னையில் (டிச., 15) தொடங்கியுள்ளது. வரும் 23ஆம் தேதி வரை மனுக்கள் வழங்கப்படும் நிலையில், பொதுத் தொகுதி, தனித் தொகுதிகளுக்கு வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
மனுக்களை பெற அதிகளவில் தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டுள்ளதால் அனைவரும் முண்டியடித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் விருப்ப மனுக்களை பெறுகின்றனர்.