சென்னை: தவெகவிற்கு மட்டுமே எதிர்காலம் உள்ளது என்று அதிமுகவில் இருந்து விலகிய நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். மேலும் அவரை துணை பொதுச்செயலாளராக நியமித்து விஜய் அறிவித்தார்.
இதையடுத்து பேசிய நிர்மல் குமார், “தமிழ்நாட்டின் வெற்றிடத்தை நிரம்பியவர் விஜய். வரும் காலங்களில் தவெகவுக்கு மட்டுமே எதிர்காலம் உள்ளது. என்மேல் நம்பிக்கை வைத்து அங்கீகாரத்தை விஜய் வழங்கியுள்ளார்” என்றார்.