புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மதியத்திற்குள் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று தெரிந்துவிடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு பிப்.5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 60.42% வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று(பிப்.8) எண்ணப்படுகின்றன.
அதன்படி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், நண்பகல் 12 மணிக்குள் வெற்றி முன்னணி நிலவரம் உறுதி செய்யப்படும் என தெரிகிறது.
ஆம் ஆத்மியின் வெற்றியை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தவறாக மதிப்பிட்டுள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி ரீனா குப்தா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 26 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத பாஜக, இம்முறை ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், 2013, 2015 மற்றும் 2020ம் ஆண்டுகளில் தேர்தல் கணிப்புகளை காட்டி ரீனா குப்தா விளக்கமளித்தார்.