சென்னை: விசிக சீரமைப்பு பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் தீவிரப்படுத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தொழிலில் ஓரிருவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியது முற்றிலும் உண்மை. அவர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, அரசியலையும் தீர்மானிக்கிறார்கள். இது அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் தொகுதி வாரியாக மாவட்ட செயலாளர்களை நியமிக்க 10 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்தோம்.
தேர்தல் எல்லையை அடிப்படையாக வைத்து கட்சி செயல்படுவதே சரியானது என்ற அடிப்படையில் 234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர் ஒருவரை விரைவில் அறிவிக்க உள்ளோம். இதுகுறித்து நீண்ட நாட்களாக விவாதித்து, கட்சிகளை தயார்படுத்தி, அனைவரது ஒப்புதலுடன் செயல்படுத்த உள்ளோம். அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சி இது. இதன் மூலம் தேர்தல் காலத்தில் நிர்வாகிகள் மக்களை எளிதில் சென்றடையவும், பணி செய்யவும் எளிதாக இருக்கும்.
ஒரு வாரத்தில் இப்பணிகள் தீவிரப்படுத்தப்படும். அம்பேத்கர் நினைவு நாள் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை ஏற்பாட்டாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றார்.