ஆந்திரா: திருப்பதி லட்டு விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டின் மீது கற்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தும் லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சி காலத்தில் தான் இந்த தவறு அரங்கேறியது என ஆளும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இதனை அம்மாநில முன்னாள் முதல்வர் ஜென் மோகன் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். இந்த நிலையில், லட்டு விவகாரத்தில் ஜென் மோகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஜென் மோகன் வீட்டை முற்றுகையிட்டனர்.
வீட்டின் மீது கற்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தியதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில், அம்மாநில முன்னாள் முதல்வர் வீட்டில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதில், வீட்டின் பாதுகாவலர் அறையின் கண்ணாடி உடைந்தது. தாக்குதல் மட்டுமின்றி ஜெகன் மோகன் வீட்டு சுவர்களில் காவி வண்ணங்களை பூசியுள்ளனர்.