சென்னை: காங்., கட்சி வேட்பாளர் அறிவிப்பு… தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், தற்போது மணிப்பூர் மற்றும் நாகலாந்து மாநிலங்களுக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்திற்கு இவரை கட்சி மேலிடம் தேர்வு செய்துள்ளது. இதேபோல், தெலங்கானாவில் அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.