திருச்சி: மனித ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன் அன்சாரி திருச்சியில் இன்று அளித்த பேட்டி:-
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது. இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வர திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த அறிவிப்பு நாட்டின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி மற்றும் மாநில அரசுகளுக்கு அதிகாரப் பகிர்வு ஆகியவற்றை எடுத்துக்காட்டும்.
துணை முதல்வர் பதவிக்கு உதயநிதி தகுதியானவர் என்று நம்புகிறேன். கடந்த 3 ஆண்டு ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ரூ.6,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டது வரவேற்கத்தக்கது.
உக்ரைன், ரஷ்யா போன்ற நாடுகளுக்கு சென்று அந்நாட்டு அதிபர்களை சந்தித்து போரை நிறுத்த பிரதமர் மோடி முயற்சித்து வருகிறார். இது வரவேற்கத்தக்கது.
அதேபோல், மணிப்பூரில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.