சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:-
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தமிழகத்தில் பல கட்சிகள் உருவாகியுள்ளன.
ஆனால், மக்களின் ஆதரவைப் பெறுவதுதான் முக்கியம். பல கட்சிகள் மறைந்து வருகின்றன. தயாரிப்பாளராக எனது முதல் தயாரிப்பு விஜய் படம். அந்த வகையில், நீண்ட நாள் நண்பரான விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.