மும்பை: பா.ஜ.க.வில் உள்ள கறைபடிந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதின் கட்கரி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து மும்பையில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பேட்டியில், கறைபடிந்த நபர்களால் கட்சிக்குள் ஒற்றுமை பாதிக்கப்படுவதாகவும், கட்சியின் ஒருமைப்பாட்டைக் காக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பல்வேறு காரணங்களுக்காக மற்ற கட்சிகளில் இருந்து புதிய நபர்கள் பாஜகவில் சேருவதாகவும், அவர்களுக்கு கட்சியின் கொள்கை, கோட்பாடுகள், சித்தாந்தம் குறித்து முறையாகப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்திய அரசியலமைப்பில் உள்ள மதச்சார்பற்ற கொள்கைகளை வலியுறுத்திய அவர் அரசு, அரசாங்கம் மற்றும் நிர்வாகங்கள் மதச்சார்பற்றவையாக இருக்க வேண்டும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.