புதுடெல்லி: ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு இந்தியாவிற்கு சாதகமானதா. நிம்மதியை ஏற்படுத்தி உள்ளதா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
ரஷ்ய அதிபர் புடின் உடனான நேற்றைய சந்திப்புக்கு டிரம்ப் 10/10 ரேட்டிங் கொடுத்துள்ளார். ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கான வரி விதிப்பு குறித்து அடுத்த 2 – 3 வாரங்களில் முடிவெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புடின் உடனான பேச்சுவார்த்தைக்கு முன்னர் கடுமை காட்டிய அதிபர் டிரம்ப், தற்போது மென்மையை கடைபிடிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், இந்தியா மீதான 50 சதவீதம்வரியை குறைக்கலாம் எனவும் வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதனால் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பில் இருவரும் என்ன பேசிக் கொண்டனர் என்ற தகவல் குறித்து எதுவும் தெரியாத நிலையே நீடித்து வருகிறது.
இ