புதுச்சேரி: புதுச்சேரி முதல்வருக்கு தி.மு.க நிர்வாகி மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் வீடியோ வெளியாகி உள்ளது.
பேனரை எடுக்கச் சொன்னால் புதுச்சேரி முதலமைச்சர் தமிழக எல்லைக்குள் நுழைய முடியாது என புதுச்சேரி அதிகாரிகளை போலீஸார் முன்னிலையில் கடலூர் தி.மு.க பிரமுகர் ஒருவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் வீடியோ வெளியாகி உள்ளது.
கடலூர் தி.மு.க பிரமுகர் ஒருவரின் திருமணத்திற்காக விழுப்புரம்-புதுச்சேரி எல்லையான கோட்டக்குப்பம் மற்றும் காமராஜர் மண்டபம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்ற அதிகாரிகள் முற்பட்ட போது அவர்களை தி.மு.கவினர் மிரட்டியதாக கூறப்படுகிறது.