கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சேலம் ரவுண்டானா ரோடு ராசு தெருவில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இதில், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கூட்டணிக்காக டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுகவினர் சந்தித்ததாக உண்மையான தகவல் இல்லை. டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலக கட்டிடத்தை ஆய்வு செய்ய சென்ற அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.
தமிழகத்தின் நலனுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து மத்திய அரசிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தோம். மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். இதில் அரசியல் இல்லை. அ.தி.மு.க.வை பொறுத்த வரையில் தமிழகத்தை 31 ஆண்டுகள் ஆட்சி செய்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த கட்சி. அ.தி.மு.க., எப்போதும் ஒரே பார்வையில் தான், எங்களின் ஒரே எதிரி திமுக. திமுகவுக்கு எதிராக யார் போராட வந்தாலும் ஏற்க தயாராக உள்ளோம்.

எங்களுடன் இணக்கமாக செயல்படுபவர்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு ஆரம்பமாகிவிட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதும், தொண்டனாக இருந்தாலும் பாடுபடுவேன் என்றும், கட்சியின் நலனே முக்கியம் என்றும் அண்ணாமலை கூறியிருப்பது அவர்களின் சொந்த கருத்து. இதை அவர்கள் விளக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தொழில்முனைவோர் மாநாட்டின் விளைவாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெல்டா, ஓலா, டாடா எலக்ட்ரானிக்ஸ், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உதயமானது. திமுக ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் அப்படி ஏதேனும் நிறுவனம் வந்திருக்கிறதா?
2026 தேர்தலில் திமுகவுக்கும், தமிழகத்துக்கும் வெற்றிக் கழகத்துக்கும் இடையேதான் போட்டி என்று விஜய் தனது கருத்தை சரியாக கூறியுள்ளார். தி.மு.க., ஆட்சியில் தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் சிரமப்பட்டனர். அதிமுக ஆட்சியில் அவருக்கு அவ்வளவு சிரமம் இல்லை. அந்த விரக்தியின் வெளிப்பாடாகவே பேசியுள்ளார். அதிலிருந்து வெளியே வந்து அரசியல் பேச வேண்டும். ஆதவ் அர்ஜுனன் எங்கு சென்றாலும் தன்னை முன்னிலைப்படுத்தி பேசுகிறார்.
அவரை அடையாளம் கண்டுகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் அவரை ஒதுக்கி வைத்தார். விஜய்க்கு சினிமா அனுபவம் அதிகம். அவர் இன்னும் மக்களை சந்திக்கவில்லை. 2 வருட அரசியலை 4 சுவர்களுக்குள் முடித்துள்ளார். மக்களை சந்தித்து அரசியல் செய்தால், அரசியலை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர்.