சென்னை : புஸ்ஸி ஆனந்தை வெளியே அனுப்பிவிட்டு மாவட்ட நிர்வாகிகளிடம் விஜய் ஆலோசனை நடத்திதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் உலா வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து தலைவர் விஜய் சமீபத்தில் ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அதன் பேரில் 234 தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்தது.
கட்சி பதவிகளில் முறைகேடு நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அதிரடி உத்தரவை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் வாயிலாக அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் இன்று (வெள்ளிக் கிழமை) ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி, தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்த விழாவை பிரமாண்டமாக நடத்துவது பற்றி இன்று நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
முதலாம் ஆண்டு விழாவின்போது எத்தனை கொண்டாட்டங்கள் மேற்கொள்வது என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டம் முடிவடைந்ததும் 7 மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியலை கட்சி தலைவர் விஜய் வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மற்றும் பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை தவெக தலைவர் விஜய் வெளியே அனுப்பி விட்டு, பின்னர் மாவட்ட நிர்வாகிகளிடம் தனித் தனியாக ஆலோசனை நடத்தினார் என்று அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் உள்ள வருகின்றன.