கரூர்: அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் தவெக-தேமுதிக கூட்டணி அறிவிக்கப்படும் என்று தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டிப்பட்டிக் கோட்டை பகுதியில் தேமுதிக நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேமுதிக வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்ததற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இருப்பினும், தற்போது எங்கள் நிலைப்பாடு தேமுதிகவின் வளர்ச்சி மட்டுமே.
அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் தேமுதிக-தவெக கூட்டணி உருவாகுமா என்பதை பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.