சென்னை : திமுக கூட்டணியில் இருந்து விலக காய் நகர்த்துகிறது விசிக என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
திமுகவை மட்டுமே நம்பி விசிக இல்லை என திருமாவளவன் கூறிய நிலையில், கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
தற்போது, தமிழ்நாடு அரசின் காலி பணியிடங்களை நிரப்பவும், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான திமுகவின் தேர்தல் வாக்குறுதியை விரைந்து நிறைவேற்றவும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவிற்கு அவர் அழுத்தம் கொடுப்பதில் அரசியல் கணக்கு இருக்குமா? திமுக கூட்டணியில் இருந்து விலக விசிக காய் நகர்த்துகிறதா என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.