சென்னை: எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை; மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானதுதான் அதிமுக – பாஜக கூட்டணி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி; அதிமுகவை பாஜக மிரட்டி பணிய வைத்துள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார்.
எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை; மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானதுதான் அதிமுக – பாஜக கூட்டணி. அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறினார்.
எங்களது கூட்டணி வலிமையான, வெற்றிக் கூட்டணி; இன்னும் பல கட்சிகள் வந்து சேர இருக்கிறது என்று கூறினார்.