கரூர்: எங்கள் கருத்து குறித்து நாளை தெரிவிப்ோம் என்று தவெக நிர்வாகி நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வைலையை ஏற்படுத்தி உள்ளது. கரூர் சம்பவம் குறித்து உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று தவெக சார்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், “கரூர் சம்பவம் குறித்து நாளை மதியம் 2.15 மணிக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும். அதனால் நாளை மதியத்திற்கு மேல் எங்களுடைய கருத்து மற்றும் நிலைப்பாட்டை நாங்கள் தெரிவிப்போம் என்றார்.