நெல்லை: தேமுதிகவோட பேச்சு நடத்தவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கூட்டணி ஆட்சி என்பது தமிழகத்தில் சாத்தியமில்லை என முதல்வர் சொல்லி இருப்பது அவர்களது கூட்டணிக்காக இருக்கலாம்.
தேசிய ஜனநாயக கூட்டணி வரும் சட்டசபை தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும்.தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான். யார் தேர்தலில் அதிகம் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் இருக்கிறார்களோ அவர்கள்தான் அமைச்சர்களாக இருப்பர். ஆட்சியில் பங்கு என்ற எந்த டிமாண்ட்டும் எங்களிடம் கிடையாது.
ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்று தெளிவாக கூறிவிட்டோம். தேமுதிகவிடம் கூட்டணி தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை. ஓபிஎஸ்சை அழைப்பது தொடர்பாக இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சசிகலா நிலைப்பாடு இதுவரை என்ன என்பது தெரியவில்லை. அவர்களது நிலைப்பாடு தெரிந்தவுடன் அடுத்த கட்ட முடிவு மேற்கொள்ளப்படும்.
வரும் தேர்தலில் முதல்வராக விஜய் வருவார் என செங்கோட்டையன் சொல்கிறார். முதலில் அவர் கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெறட்டும். அதன்பிறகு பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேமுதிகவுடன் பாஜ தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். இதேபோல், ‘‘அதிமுக பேசி தேமுதிக படியல… மந்திரி பதவிலாம் கேட்குறாங்க… அதான் பாஜ பேசுது’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் தெரிவித்தார். தேமுதிக பொதுச்செயலாளரும் இரண்டும் பக்கம் கூட்டணி பேசு வருவதை ஒப்புக்கொண்டார். ஆனால், நயினார் நாகேந்திரான தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளர்.