சென்னை: நான் முதலமைச்சரா என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கோபமடைந்துள்ளார். எதற்காக தெரியுங்களா?
தவெகவின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. அதில், பொதுச்செயலாளர் ஆனந்த்தை வருங்கால முதல்வர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த போஸ்டருக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தவெகவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன், நேரடியாக அரசியல் செய்யுமாறும், முதுகில் குத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தவெகவில் தான் சாதாரண தொண்டன் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் விளக்கமளித்துள்ளார். வருங்கால முதலமைச்சர் ஆனந்த் என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதனால் காட்டமான அவர், வேண்டுமென்றே சில விஷமிகள் போஸ்டர் ஒட்டியுள்ளதாக கூறினார்.
மேலும், இதைப் பெரிது படுத்த வேண்டாமென கேட்டுக்கொண்ட அவர், போஸ்டர் விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்படும் என்றார்.