சென்னை: ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு மற்றும் 10 மாவட்ட கூட்டங்களை நடத்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.
வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக விஜய் அறிவித்துள்ள நிலையில் தற்போது அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் கூட தமிழக அளவில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்த நிலையில் ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு மற்றும் 10 மாவட்ட கூட்டங்களை நடத்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 100 சட்டமன்ற தொகுதிகளை இணைக்கும் வகையில் அவர் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், கட்சியின் முதல் மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயர் பதிவேற்றம் செய்யப்பட்ட அடுத்த நாளே கட்சிக்கொடி அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.