சென்னை : வெளிநாட்டு வேலை என்ற பெயரில் மோசடி நடக்கிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்க உடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
காவல்துறை சார்பில் விழிப்புணர்வு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில். ‘வெளிநாட்டில் வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, ‘சைபர் க்ரைம்’ உள்ளிட்ட குற்றச்செயல்களில் சிலர் ஈடுபடுத்தி மோசடி செய்கின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் ‘சைபர் அடிமைகள்’ என்று வகைப்படுத்தப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் இதுகுறித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே போல் ஆன்லைனில் கடன் செயலிகள் மூலம் பணம் பெறுவது உட்பட பல்வேறு மோசடி வேலைகள் நடக்கிறது இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.