பிரபல இந்தி நடிகை ஹினா கான். பல சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ள இவர் ‘நாகினி’ சீரியலில் நடித்து பிற மொழிகளில் பிரபலமானார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு மூன்றாம் நிலை மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நான் வலிமையானவன், உறுதியானவன், இந்த நோயை முறியடிப்பேன் என்று நம்புகிறேன். சிகிச்சை தொடங்கிவிட்டது. தயவுசெய்து எனது தனியுரிமையை மதிக்கவும்,” என்று ஹினா கான் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.
உங்கள் தனிப்பட்ட அனுபவங்கள், ஆதரவான ஆலோசனைகள் இந்தப் பயணத்தில் எனக்கு உதவும், உங்கள் பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் எனக்குத் தேவை.
இதையடுத்து அவர் விரைவில் குணமடைய ஹிந்தி திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.