சேலம்: மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 26,000 கன அடியில் இருந்து 35,000 கன அடியாக உயர்ந்துள்ளது. 16 கண் மதகு வழியாக 13,500 கன அடி நீரும், நீர்மின் நிலையம் வழியாக 21,500 கன அடியும் நீரும் வெளியேற்றப்படுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியில் இருந்து 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது.