நாட்டில் குளிர் சீசன் துவங்கி, காலையில் வாக்கிங் செய்யும் ஆர்வம் அதிகரித்து உள்ளது. ஆனால், சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குளிர்காலத்தில் நடைபயிற்சி செய்வது தவிர்க்க வேண்டும்.
குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று, மூச்சுக்குழாயை இறுக்கமாக்கி, சுவாசிக்க கஷ்டமாக்கும். இது வீசிங், இருமல் அல்லது மூச்சுத் திணறலை ஏற்படுத்தக் கூடும். குளிர் சீசனில் காற்று மாசு அதிகரிக்கும்.
குறிப்பாக அதிகாலை நேரங்களில். இது நுரையீரலை எரிச்சலூட்டும். மேலும், குளிர்ந்த காற்று டிஹைட்ரேஷனை ஏற்படுத்தி, சுவாச பிரச்சனைகளை அதிகரிக்கும்.
குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு மண்டலம் குறைந்து, சளி, காய்ச்சல் போன்ற தொற்றுகள் பரவும். குளிர்காலத்தில் வாக்கிங் செய்யும் போது, வீட்டில் ப்ரீஹீட் செய்து, ஸ்கார்வ்ஸ் அல்லது மாஸ்க் பயன்படுத்தி, பராமரிப்பு நடவடிக்கைகள் பின்பற்றுவது பாதுகாப்பாக இருக்கும்.