தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. ஆண்டு தேர்வு அட்டவணையின்படி, இந்தத் தேர்வு டிசம்பர் 20-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரைவாளர், பில் கலெக்டர், வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பல பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதால், இளைஞர்கள் மத்தியில் தேர்வுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த முறை சுமார் 13.89 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த முறை 15 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
