சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 28-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி நேற்று அறிவியல் பாட தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும் 4,113 மையங்களில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர். இதனிடையே அறிவியல் பாடத் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

2 மற்றும் 4-ம் வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்தது. மற்ற அனைத்து பிரிவுகளும் எளிதாக இருந்தன. கடந்த ஆண்டை விட மாணவர் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வு வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இத்துடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைகிறது.