தஞ்சாவூர்: தஞ்சாவூரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வில் மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, மீன், சிக்கன் கபாப், விதவிதமான கேக், ஐஸ்கிரீம் வகைகள் என 113 வகை அசத்தலான சைவம் மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.
தஞ்சையில் நூற்றாண்டு கண்ட பிளேக் மேல்நிலைப்பள்ளியில் 19886 ம் ஆண்டு படித்த இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மாணவர்கள் சந்தித்து சமத்துவ பொங்கல் வைத்து குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் என 250 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் தற்போது மருத்துவர்கள், இன்ஜினியர்கள், காவல் அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பல்வேறு துறைகளில் உள்ளனர்.
பின்னர் மதிய விருந்தாக மட்டன் சூப், வெஜிடபிள் சூப், மீன் பிரியாணி, உள்ளிட்ட அசைவம், சைவம் என 113 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. பின்னர் கைப்பந்து எறிதல் பந்து கைமாற்றுதல் கயிறு இழுத்தல், முறியடித்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ஆயிரம் இரண்டாம் பரிசாக 500 மூன்றாம் பரிசாக 300 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன,
முன்னாள் மாணவர்கள் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மியா கார்ஸ் இக்பால், ஏவிஎம் ஆனந்த், மார்பிள் வேர்ல்டு அன்புராஜ், கோபால், ரவி ஆகியோர் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். பின்னர் முன்னாள் மாணவர்கள் அனைவரின் சார்பிலும் இல்லாதோருக்கு இயன்றதை செய்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் 18 பேருக்கு தையல் இயந்திரங்கள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.