சென்னை: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடிக்கு மேல் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, ஆவின் நிர்வாகம் கூறுகையில், “ஆவின் பால் மற்றும் பால் பொருட்களுக்கு, பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.
சுமார் 4.5 லட்சம் கிராமப்புற உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் சென்னை முழுவதும் அமைந்துள்ள 27 யூனியன்கள் மூலம், பால் மற்றும் சுமார் 200 வகையான பால் துணை பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, சுகாதாரமான முறையில் தரம் என்ற நோக்கத்துடன் நியாயமான விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடியாக திகழ்கிறது. இதன் மூலம், கிராம அளவில் லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆவின் பெரிதும் உதவுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் விற்கப்படுகின்றன.
இந்த வகை ஸ்பெஷல் இனிப்புகளுக்கு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை அணுகி அவர்களுக்கு இனிப்பு மற்றும் காரப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதுவரை சுமார் ரூ.115 கோடிக்கு இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட ஆயின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.