ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேர் தாயகம் திரும்பினர். ஜூன் 30ம் தேதி பாம்பனை சேர்ந்த ஜார்ஜ் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் கென்னடி, தாஸ், அந்தோணி, தேவதாஸ், லாரன்ஸ், சூசைராஜ் உள்பட 7 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், நாட்டுப்படகையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 2 விசைப் படகுகள் மற்றும் 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் மீதான வழக்குகள் கடந்த 8ம் தேதி உள்ளூர் போலீஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் 7 பேரையும் மீண்டும் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க கூடாது என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்து நீதிபதி நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார். படகு தேசியமயமாக்கப்பட வேண்டும்.
புதுக்கோட்டையில் இருந்து வந்த விசைப்படகில் 4 பேரில் 2 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதேவேளை, படகின் உரிமையாளருக்கும் சாரதிக்கும் அபராதமும் ஓராண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இரண்டாவது விசைப்படகில் இருந்த 5 பேரில் 4 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். விசைப்படகு ஓட்டி வந்த படகு உரிமையாளருக்கு அபராதமும், 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், விடுவிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 7 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 மீனவர்கள் என மொத்தம் 13 பேர் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் சென்னை வந்தனர். தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.