ஆரல்வாய்மொழி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஓணம் பண்டிகையின் போது கேரள மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தோவாளை பூ மார்க்கெட்டிலும் விற்பனை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆனால், ஓணம் பண்டிகையையொட்டி, பூ விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால், விவசாயிகள் அதிகளவில் பூக்களை விற்பனைக்கு சேகரித்துள்ளனர்.
அதன்படி இன்று சந்தைக்கு 300 டன் பூக்கள் வரவழைக்கப்பட்டன. ஆனால் இன்று கேரளாவில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை குறைந்துள்ளது.
இதனால் அதிகாலை சந்தையில் சுமார் 150 டன் பூக்கள் மட்டுமே விற்பனையானது. 150 டன் பூக்கள் தேங்கி நிற்கின்றன.