திருச்சி: திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரயில்வே சட்டத்தின் கீழ் 4,372 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டு ரூ.19.63 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ரயில்வே சொத்துகளை பாதுகாப்பதும், ரயில்வே சொத்துகளின் இயக்கத்தில் ஏற்படுத்தப்படும் தடைகளை களைவதும், ரயில் பயணிகளை பாதுகாப்பது ரயில்வே பாதுகாப்புப் படையின் முதன்மை கடமைகளாகும்.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் 152 ரயில் நிலையங்களிலும், ரயில் பாதைகளிலும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுகின்றனர். ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணிகள் பணியில் ஈடுபடுகின்றனர். ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதால், பெரியளவிலான குற்றங்கள் ஏதும் திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெறவில்லை.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 4,372 வழக்குகள் பதியப்பட்டு, ரூ.19.63 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.