சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தடையின்றி விநியோகம் செய்ய ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணைகளிலும் அரை கிலோ பால் பவுடர் 4000 பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 20 டன் பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆவின் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்காக ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் தலா அரை கிலோ பால் பவுடர் கொண்ட 4000 பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் 20 டன் பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 50,000, சோஷிங்கநல்லூர் பால் பண்ணையில் அரை லிட்டர் பால் (யுஎச்டி) 90 நாட்கள் சேமிக்கப்படுகிறது.
சென்னை, தாம்பரம், சோழிங்கநல்லூர் உட்பட்ட ஆவடி, அண்ணாசாலை, தியாகராயநகர், பூந்தமல்லி, மாதவரம், விருகம்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட ஆவின் மண்டல அலுவலகங்களில் தலா 1000 கிலோ வீதம் 9000 கிலோ பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 500 டன் கால்நடை தீவனமும், சுமார் 50 டன் தாது உப்பு கலவையும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய வட கடலோர மாவட்டங்களில் நகர்ந்து கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னைக்கு இன்று (அக்.14) கனமழை எச்சரிக்கையும், நாளை (அக்.15) மிக கனமழை எச்சரிக்கையும், நாளை மறுநாள் (அக்.16) மிக கனமழைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.