தென் மண்டல ஆட்டோமேஷன் கண்காட்சி சென்னையில் 2023-ல் நடந்தது. இதன் வெற்றியை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 2-வது தென் மண்டல ஆட்டோமேஷன் கண்காட்சியை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் டி.எம். அன்பரசன், சென்னையில் மார்ச் 6-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
கண்காட்சி வரும் 8-ம் தேதி வரை நடக்கிறது. இது அதிநவீன ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களைக் காண்பிக்கும். இது பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாகவும் இருக்கும். இந்தக் கண்காட்சியானது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEகள்), ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு சமீபத்திய ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்கும்.
ஐஇடி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், நிகழ்ச்சி அமைப்பாளருமான எம்.ஆரோக்கியசாமி பேசுகையில், “செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம் தொழில்துறையை மாற்றி அமைக்கிறது. அவர்கள் உற்பத்தி மற்றும் வணிக பயன்பாடுகளில் புதிய சாத்தியங்களை உருவாக்குகின்றனர். இந்த முன்னேற்றங்களை ஆராய்வதற்கும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் இந்தக் கண்காட்சி ஒரு முதன்மையான தளமாக இருக்கும்.