கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே எட்டாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக மூன்று ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகிய மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பள்ளிகளில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவது பெற்றோர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.