தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரசு தொழிற் பயிற்சி நிலைய மைதானத்தில் மாபெரும் அரசுப் பொருட்காட்சியினை உயர்கல்வித் துறை அமைச்சர் செழியன் தொடக்கி வைத்து 47 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம் அரசு தொழிற் பயிற்சி நிலைய மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசுப் பொருட்காட்சியினை மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தொடக்கி வைத்தார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலின்படி 45 நாட்கள் வரை தஞ்சாவூர் அரசு தொழிற் பயிற்சி நிலைய மைதானத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அனைத்துத் துறைகளின் திட்டங்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் நிறைந்த அரசுப் பொருட்காட்சியினை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), அசோக்குமார் (பேராவூரணி), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கோவி.செழியன் கூறுகையில்,
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாபெரும் அரசுப் பொருட்காட்சி 45 நாட்கள் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறவுள்ளது. அனைத்து பொதுமக்களும் அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றைடைய வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை. உயர்கல்வித் துறை. சுற்றுலாத் துறை, குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத் துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை. தோட்டக்கலைத் துறை, பொதுப் பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை. கைத்தறி மற்றும் கதர் கிராமத் தொழில் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மீன்வளத்துறை போன்ற 31 பல்வேறு துறை சார்ந்த அரங்கங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்களுக்கு எந்தெந்த துறையில் பெறப்படும் நலத்திட்ட உதவிகள் எவ்வாறு அணுக வேண்டும் என்பதும் துறையின் பயன்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளது. மாவட்ட கலெக்டர் ஒருங்கிணைப்பில் அனைத்து துறைகளும் இணைந்து இக்கண்காட்சியில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள்.
இப்பொருட்காட்சி பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும், இப்பொருட்சிகாட்சியில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள், பல்வேறு வகை சார்ந்த உணவு அரங்குகள் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, அமைச்சர் கோவி.செழியன் தஞ்சாவூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர சைக்கிள் ரூ.11445 மதிப்பில் 1 பயனாளிக்கும். மடக்கு சக்கர நாற்காலி ரூ.15,750 மதிப்பில் 1 பயனாளிக்கும், மனவளர்ச்சி குன்றிய குழந்தையின் பெற்றோருக்கு தையல் இயந்திரம் ரூ.6,389 மதிப்பில் என மொத்தம் 3 பயனாளிகளுக்கு ரூ.33,584 மதிப்பில் நலத்திட்டஉதவிகள் என மொத்தம் 47 பயனாளிகளுக்கு ரூ.138,26,468 மதிப்பில் வழங்கினார்.
பின்னர் அனைத்துத்துறை ஸ்டால்களை அமைச்சர் பார்வையிட்டார். இதில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டு இருந்த அரங்கினை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது கோட்டப் பொறியாளர் செந்தில்குமார், உதவி கோட்டப்பொறியாளர் கீதா, ஆனந்தி, உதவி பொறியாளர்கள் விஜய், லட்சுமி பிரியா, ரஹமத் நிஷா, இளவரசன், ஒப்பந்தப்பணி மேற்பார்வையாளர் திருமாறன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர்கள் நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்ட பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, இணை இயக்குநர் (வேளாண்) வித்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.