மதுரை: மதுரை மாநகராட்சியில், சொத்து வரி செலுத்துவோருக்கு, 5 சதவீதம் தள்ளுபடி, அக்., 31-க்குள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில், 100 வார்டுகளில் வசிக்கும் குடிமகன்கள் மற்றும் வரி அல்லாத வருவாய் ஆதாரங்களில் இருந்து, சொத்து வரி, குடிநீர், கழிவுநீர் கால்வாய் பராமரிப்பு கட்டணம் மூலம் வருவாய் கிடைக்கிறது.
இதில், மாநகராட்சிக்கு சொத்து வரிதான் முக்கிய வருவாய். இந்த வருவாயைக் கொண்டு மாநகராட்சி பல்வேறு அடிப்படை மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தற்போது நிலுவைத் தொகை இல்லாமல் சொத்து வரி செலுத்துபவர்கள் குறைவு. எனவே, சொத்து வரியை விரைவாக செலுத்த மாநகராட்சி வார்டு தோறும் பில் கலெக்டர்களை முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில், 31.10.2024-க்குள் 2024-2025-ம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான சொத்து வரி செலுத்தும் சொத்து வரி உரிமையாளர்களுக்கு சொத்து வரியில் 5 சதவீதம் (அதிகபட்சம் ரூ. 5000) தள்ளுபடி வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
எனவே மதுரை மாநகராட்சியின் 100 வார்டு பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் அக்டோபர் 31, 2024-க்குள் சொத்து வரி செலுத்தி 5 சதவீதம் தள்ளுபடி பெற்று மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளுக்கு பங்களிக்குமாறு ஆணையர் தினேஷ்குமார் கேட்டுக்கொண்டார்.