சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்கி பள்ளிக் கல்வித் துறையின் மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
புரோகிராமர்கள், சிவில் இன்ஜினியர்கள், கணக்குகள் மற்றும் தணிக்கை மேலாளர்கள், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர்கள், எஸ்எம்சி கணக்காளர்கள், தரவு உள்ளீட்டு அதிகாரிகள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஊதிய அளவில் பணிபுரியும் உதவியாளர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஜூன் 1 முதல் இந்த ஊதிய உயர்வு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அரசுப் பணியில் ஓய்வு பெற்ற பிறகு பணிபுரியும் ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு இது பொருந்தாது என்றும், ஊதிய உயர்வு பெற ஒரு வருட பணி அனுபவம் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.