திருவள்ளூர்: திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் பெய்து வரும் மழையால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 577 கனஅடி நீர்வரத்து உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்த லேசான மற்றும் மிதமான மழையால், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள முக்கிய ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று (ஆகஸ்ட் 5) காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 577 கனஅடி வந்து கொண்டிருக்கிறது.
இதேபோல் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 110 கனஅடியும், புழல் ஏரிக்கு வினாடிக்கு 68 கனஅடியும், கண்ணங்கோட்டை-தரை கண்டிகை ஏரிக்கு வினாடிக்கு 15 கனஅடியும் மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 1,441 மில்லியன் கன அடியாகவும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 83 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
இதேபோல், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் ஆதாரம் 2,513 மில்லியன் கன அடியாகவும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணங்கோட்டை-தரை கண்டிகை ஏரியின் நீர் இருப்பு 303 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள்.