தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழை காரணமாக இதுவரை 6,30,621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பெஞ்சல் புயல் காரணமாக 2,86,069 ஹெக்டேர் வேளாண் பயிர்களும் 73,263 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களும், வடகிழக்குப் பருவமழையால் 2,25,655 ஹெக்டேர் வேளாண் பயிர்கள் மற்றும் 45,634 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
சேதமடைந்த பயிர்கள் குறித்த கணக்கெடுப்பை டிசம்பர் 17க்குள் முடிக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட எந்த விவசாயியும் தவறவிடப்படக்கூடாது. விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை ஈடுகட்டுவதற்காக பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் விரைவாக இழப்பீடு வழங்க நடவடிக்கை.இதற்காக புள்ளியியல் துறை மற்றும் பயிர்க் காப்பீடு நிறுவனங்களுடன் கூட்டம் நடத்தப்படும்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி மற்றும் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 2,906 மெட்ரிக் டன் வேளாண் பொருட்கள் சேதமடைந்துள்ளன.இந்த ஆய்வுக் கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் அபூர்வா, வேளாண்மைத் துறை இயக்குநர் பி.முருகேஷ் மற்றும் தோட்டக்கலை துறை இயக்குநர் பி.குமரவேல் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.தமிழகத்தில் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.