சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் மலைப்பகுதிகளுக்கு எளிதாக பயணிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மலைப்பாங்கான சுற்றுலா தலங்களான ஏற்காடு மற்றும் ஏலகிரியில் ரோப்வே அமைக்கும் திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு சினிமா அதன்படி, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் டெண்டர் கோரியுள்ளது. ரோப்வே அமைப்பதற்கான சாத்தியக்கூறு எவ்வளவு தூரம் என்பதை தீர்மானிக்க ஆய்வு நடத்தப்படும். எந்த இடத்திலிருந்து எந்த இடத்திற்கு ரோப்வே அமைக்கப்படும் என்பதை தீர்மானிக்க ஆய்வு நடத்தப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பிறகு அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என்று சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.