By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
இந்தியா

தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்

Nagaraj
Last updated: April 29, 2026 9:19 am
By Nagaraj 3 Min Read
Share
SHARE

புதுடில்லி: விலை உயர்கிறதா?… ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்த இருப்பதாக மக்களிடம் ஒரு தவறான வதந்தி பரவி வருகிறது. இதனால், பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதுதொடர்பாக, மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெற்ற வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நிறுத்துவதற்கான முயற்சியில் பாகிஸ்தான் இருதரப்பையும் மத்தியஸ்தம் செய்துவருகிறது. எனினும், இதுவரை அதில் எந்தச் சுமுக உடன்பாடும் ஏற்படவில்லை. இதற்கிடையே, உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் கப்பல்களைக் குறிவைத்தும், கைப்பற்றியும் அச்சுறுத்தி வருகின்றன.

இதனால் உலகளாவிய அளவில் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்திற்கும் மேல் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு பேரல் சுமார் 70 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெய், இந்த மாதம் சராசரியாக 114 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உள்ளது. இதனால், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மூன்று மடங்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில், உலகளவில் விலை உயர்வு இருந்தபோதிலும், இந்தியாவில் சில்லறை எரிபொருள் விலை 2022 ஏப்ரல் மாதத் தொடக்கத்திலிருந்து மாற்றமின்றி உள்ளது. அதாவது, கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த காலங்களில் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை லாபத்துடன் சமன் செய்துவந்த நிலையில், தற்போது எண்ணெய் தட்டுப்பாடுகளுக்கு இடையேயும் மாற்றமின்றி அதை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், சமீபத்தில் ப்ரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. அதன்படி, நயாரா நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5-ம், டீசலுக்கு ரூ. 3-ம் உயர்த்துவதாக அறிவித்திருந்தது. ஆனால், அடுத்த சில நாட்களில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை ஏற்றத்தை தடுக்கும் நோக்கில் எண்ணெய் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியை மத்திய அரசு குறைத்தது.

அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வசூலிக்கப்பட்ட ரூ. 13 கலால் வரியை ரூ. 3 ஆகக் குறைக்கப்பட்டது. டீசலுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்ட நிலையில், முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஐந்து மாநிலங்களுக்கான (தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம்) சட்டப்பேரவைத் தேர்தல் நாளையுடன் நிறைவடைகிறது. அதாவது, ஏற்கெனவே 4 மாநிலங்களில் தேர்தல் முழுவதுமாக நிறைவடைந்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் நாளை இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்துடன், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

இத்தகைய சூழலில், ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்த இருப்பதாக மக்களிடம் ஒரு தவறான வதந்தி பரவி வருகிறது. இதனால், பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தில், விலை உயர்வு குறித்த வதந்திகளால் பெட்ரோல் நிலையங்களில் மக்கள் பீதியுடன் பொருட்களை வாங்குவதாகவும், அதனால் பெட்ரோல் நிலையங்களில் நீண்டவரிசைகள் காணப்படுவதாகவும் செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அங்கு, 400-க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து போனதாகவும், சில நிலையங்களில் தேவை 30 முதல் 33 சதவீதம் வரை அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வதந்தி காரணமாக அங்கு கூட்டம் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய விலை உயர்வு குறித்த யூகங்களுக்கு மத்தியில், மேற்கு வங்கத்தில் நாளை வாக்குப்பதிவு முடிந்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

You Might Also Like

25 குழந்தைகள் மீட்பு

மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா!

ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!

குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

டாக்டர் பரிந்துரை இல்லாமல் இனி இருமல் மருந்து கிடையாது: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

TAGGED:Andhra PradeshCentral GovernmentelectionsIncreasePetrol pricepetrol stocksஆந்திராஉயர்வுதேர்தல்பெட்ரோல் பங்குகள்பெட்ரோல் விலைமத்திய அரசு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?