மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது மாநிலங்களவை (Rajya Sabha) எம்பி பதவி காலம் முடிவடைந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி அவருக்கு மீண்டும் எம்பி சீட் வழங்காததால், விதிகளின்படி அவர் தனது அமைச்சர் பதவியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.