ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் உள்ள ஜவஹர்லால் நேரு பார்மா சிட்டியில் இயங்கி வரும் ‘தக்ஷினா எனர்ஜி இண்டஸ்ட்ரீஸ்’ ரசாயன ஆலையில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் இருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.