பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2026-ஆம் ஆண்டிற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், பெங்களூருவில் இன்று பிரிக்ஸ் நாடுகளின் விண்வெளி முகமை தலைவர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு தொடங்கியது. இஸ்ரோ (ISRO) நடத்தும் இம்மாநாட்டில் விண்வெளி நிலைத்தன்மை மற்றும் புதிய விண்வெளி கவுன்சில் அமைப்பது குறித்து பிரேசில், சீனா, ரஷ்யா உள்ளிட்ட 11 நாடுகளின் பிரதிநிதிகள் விவாதிக்கின்றனர்.