சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் சி. ஜோசப் விஜய் பதிலளித்துப் பேசினார். அப்போது முந்தைய திமுக ஆட்சியின் மின்தடை மற்றும் கட்சி நிதி குறித்து அவர் விமர்சித்ததால் அவையில் காரசார விவாதம் வெடித்தது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்த நிலையில், முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் பழைய சைகையை சபாநாயகர் அனுமதியோடு முதல்வர் விஜய் செய்து காட்டியதால் அவை பரபரப்பானது.